அடிப்பின் மரண விசாரணையை சிதைக்க முயற்சி! – சாஸ்லின்

கோலாலம்பூர், ஜூன். 13 – தற்போது நடைபெற்றுவரும் தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணையில் அவரது குடும்பத்தின் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்  சாஸ்லின் மன்சோர் முன் வந்துள்ளார்.

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸ் ஆகியோருடன் கலந்து பேசிய பின்னர்,  தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

அடிப்பின் தகப்பனார் தம்மைச் சந்தித்து தமது குடும்பத்தின் சார்பில் ஆஜராக வேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும் சாஸ்லின் தெரிவித்தார்.

அந்த விசாரணையில் தடயவியல் நிபுணரின் முடிவை ஒதுக்கித் தள்ள முயற்சிகள் நடப்பதாக முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் அதனைத் தெரிவித்தார்.

The post அடிப்பின் மரண விசாரணையை சிதைக்க முயற்சி! – சாஸ்லின் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *