அதிகார ஒப்படைப்பு விவகாரம்; பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்காதீர் – அன்வார்

கோலாலம்பூர், அக் 9 – பிரதமர் பதவியிலிருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என அறிவிக்கும்படி துன் டாக்டர் மகாதீருக்கு நெருக்குதல் கொடுப்பதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பி கே ஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார் .

இத்தகைய கேள்விகளை தொடர்ந்து டாக்டர் மகாதீரிடம் கேட்பவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு செய்தியாளர் கூட்டத்திலும் எப்போது நீங்கள் ஓய்வு பெற போகிறீர்கள் என டாக்டர் மகாதீரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கின்றனர். இத்தகைய கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அவர் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்குங்கள் என அன்வார் கேட்டுக்கொண்டார்.

எபெக்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய பின்னர் பிரதமரின் அதிகார ஒப்படைப்பு திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போது அன்வார் இதனை தெரிவித்தார்.

அதிகார பரிமாற்றம் தொடர்பாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என டாக்டர் மகாதீர் என்னிடம் தெரிவித்திருக்கிறார். எனவே தொடர்ந்து அவரிடம் இந்தக் கேள்வியை கேட்பதை அனைத்து தரப்பும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென போட்டிக்சன்  நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் அறைகூவல் விடுத்தார்

வாக்குறுதியை வழங்கியிருக்கிறேன். அந்த வாக்குறுதியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் .ஆனால் பதவி விலகிச் செல்லும்படி என்னை கட்டாயப் படுத்த வேண்டாம்.
பதவி விலகுவதற்கு சரியான தேதியை குறிப்பிடுங்கள் என என்னை கட்டாயப் படுத்த வேண்டாம் .இப்படி கட்டாயப்படுத்தும்போது தாம் செயல் இழந்ந பிரதமராகி விடுவேன் .
பதவியில் இருக்கும்போது நான் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன் என டாக்டர் மகாதீர் என்னிடம் ‌‌மனம்  திறந்து கூறியிருக்கிறார். அவரது இந்த நல்லெண்ணத்தை நான் பாராட்டுகின்றேன் என்று அன்வார் தெரிவித்தார்.

The post அதிகார ஒப்படைப்பு விவகாரம்; பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்காதீர் – அன்வார் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *