அதிபர் தேர்தலில் போட்டியா? ராஜபக்சே சகோதரர்கள் கனவு கலைகிறது!

Please log in or register to like posts.
News

கொழும்பு, செப். 14- எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தனக்கு போட்டியிட முடியாது போனால் தனது சகோதரர் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே,  இந்தியா வருகையின் போது கூறியிருந்தார்.

எனினும் அமெரிக்க பிரஜைகளான கோத்தபாய ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையின் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பொன்றின் மூலம் தெளிவாகி உள்ளது.

இலங்கை சட்டத்தின்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அதிபர்  தேர்தலிலும் இவர்கள்  போட்டியிட முடியாது.

அப்படி போட்டியிட வேண்டுமாயின் கோத்தாபாய அல்லது பசில் தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டும். எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப இவர்களால் அமெரிக்க குடியுரிமையை  ரத்துச் செய்ய முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

The post அதிபர் தேர்தலில் போட்டியா? ராஜபக்சே சகோதரர்கள் கனவு கலைகிறது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *