‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று!’- மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜூன். 13- இரு நபர்கள் ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது போன்ற வெளியாகியிருக்கும் அந்தக் காணொளி அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களால் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

அந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒன்று. இத்தகைய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் தயார் செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இதுபோன்ற வீடியோக்களை, நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால் உங்களாலும் எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஒரு நாள், என்னைக் கூட அப்படிப்பட்ட ஒரு வீடியோவில் பார்க்க நேரலாம். அது வேடிக்கையாக இருக்கும் என்று நிருபர்களிடம் பேசியபோது பிரதமர் கேலியாகச் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை தாம் சந்தித்து பேசியதாக குறிப்பிட்ட துன் மகாதீர், ‘இந்த அளவுக்கு அவர் ஒரு முட்டாளாக இருப்பார் என்று யாரும் என்னிடம் சொல்ல முனையாதீர்கள்” என்று சொன்னார்.

இந்த வீடியோவில் இருக்கும் அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்று நிருபர்கள் கேட்டபோது இந்த வீடியோ அரசியல் உள்நோக்கம் கொண்ட வர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று பிரதமர் பதில் அளித்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக போராட முடியாமல் போனவர்கள், இதுபோன்ற அசிங்கமான தந்திரங்களைக் கையாள கூடாது. இது மிகவும் அசிங்கமான செயல். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தங்களின் அரசியல் நோக்கத்தை அவர்கள் அடைந்துவிட முடியாது என்ற பிரதமர் சொன்னார்.

‘அந்த வீடியோவில் ஓரின உறவில் ஈடுபட்டுள்ள மற்றொரு நபர் மற்றொரு நபர் நான்தான்… நான் தான்..” என மூலத் தொழில்துறை துணையமைச்சர் ஷம்சூல் இஷ்கண்டாரின் உதவியாளர் முகமட் ஹாஸிக் அஸீஸ் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருப்பது குறித்து கருத்துரைத்த பிரதமர் மகாதீர், இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு அவர் வெட்கப்பட்டவராக தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம். அப்படி இல்லை என்றால் எதற்காக அவர் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்? வழக்கமாகவே, ஒருவர் இத்தகைய நிலையில் இருந்தால் அதற்காக வெட்கப்படுவார்.

ஆனால், இந்த நபர் வெட்கப்படவேயில்லை என்று பிரதமர் சாடினார். அந்த அமைச்சருடன் இத்தகைய அசிங்கமான காரியத்தில் ஈடுபட்டது ‘நான்தான் நான்தான்’ என்று அந்த நபர் சொல்லுகிறார் என்றால் அதில் உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று அமைச்சர் அஸ்மின் அலி நேற்று மறுத்தவுடனேயே இன்னும் சில வீடியோக்கள் தற்போது பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. அந்தப் புதிய வீடியோக்கள் ஏற்கனவே வந்த வீடியோக்களின் இன்னொரு பகுதியாக கருதப்படுகிறது.

இது குறித்து தன்னுடைய கண்டனத்தை அஸ்மின் அலி தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஒழித்துக் கட்டுவதற்காக நடத்தப்படும் முயற்சி இது என்று அஸ்மின் அலி சாடினார்.

 

 

The post ‘அந்த செக்ஸ் வீடியோ வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட ஒன்று!’- மகாதீர் கருத்து appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *