அன்று அரண்மனைக்கு  வெளியே! இன்று அரண்மனைக்கு உள்ளே!

Please log in or register to like posts.
News

லண்டன், மே.22- சுமார் 22 ஆண்டுகளுக்கு முன். அரண்மனையின் வெளியே அமர்ந்து ஒரு சுற்றுலா பயணியாக   புகைப்படம் ஒன்றினை எடுத்துக் கொண்டார் மேகன் மார்க்கல். இன்று அதே அரண்மனைக்குள்ளே இளவரசியாக வலம் வருகிறார்.

அமெரிக்க நடிகையாக இருந்து இளவரசர் ஹர்ரியை  திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் கருப்பின வம்சாவளி இளவரசி என்ற பெருமையை பெற்றுள்ளார்  மேகன் மார்க்கல்.

மேகன்,  அடிப்படையில் ஒரு சமூக ஆர்வலர். சமூகப் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராம்டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவு செய்வது அவரது வழக்கம்.

பெண்ணியம், பெண் முன்னேற்றம் பெண்களின் சமஉரிமை குறித்த மெர்க்கலின் கருத்துகள், அவரை டயானாவுடன் ஒப்பிட்டு பிரிட்டன் மக்களை    பார்க்க வைத்திருக்கிறது.

ஏனெனில், பிரிட்டன் இளவரசிகளிலேயே மக்களுக்கு அதிக சேவைகள் செய்து கவரப்பட்டவர் டயானா. இதன் காரணத்தினாலேயே இவர் மக்களின் இளவரசி என அழைக்கப்பட்டார்.எனவே, டயானாவுக்கும் மார்க்கலுக்கும் ஒற்றுமை இருப்பதாக பிரிட்டன் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் மற்றொரு  சுவைத் தகவல் பலரது கவனத்தை ஈர்த்தது என்னவென்றால்   22 ஆண்டுகளுக்கு முன்னர் மேகன் மெர்க்கல் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது.

ஒரு சுற்றுலா பயணியாக 15 வயதில் தனது தோழியுடன் பார்க்கிங்ஹாம் அரண்மனை முன் மேகன் மெர்க்கல் அமர்ந்திருந்தார். இன்று அதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படமாகி உள்ளது.  இது குறித்து பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *