அமெரிக்காவின் நடவடிக்கை சட்டவிரோதமானது – கிறிஸ்டியா ஃப்ரீலான்ட்

christiya-freelandஅமெரிக்காவின் நடவடிக்கை உலக வர்த்தக விதிமுறைகளின்படி சட்டவிரோதமானது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவின் “வெளிநாட்டுக்கொள்கை” செய்தித்தாளின் விருது விழாவில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட அவர் சிறந்த இராஜதந்திரி என்னும் விருதினைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் குறித்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான இறக்குமதி வரி விதிப்பினை அமெரிக்கா அமுல்படுத்தியுள்ளது. இந்த செயற்பாடு அபத்தமானது எனவும் மனவருத்தத்திற்குரியது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இந்தக் கருத்தினை ஊடகவியாளர்களுக்குத் தெரிவித்தபோது இதுதொடர்பாக நேற்று காலை அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்களுக்குத் தெரிவித்தாகக் குறிப்பிட்டிருந்தார்.