அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத், அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இயக்குனர் விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் இளமைக் காலம் முதல் முதுமை பருவம் வரை நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார். 

இதற்காக தமிழ் மொழி உச்சரிப்புக்கு பயிற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார். படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஆலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான பிளேட் ரன்னர், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர். 

ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கங்கனா சென்றுள்ளார். லுக் டெஸ்ட் புகைப்படங்களை கங்கனா ரனாவத்தின் குழு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. 

அதில், கங்கனா ரனாவத்தின் ஆடையின் மீது வெள்ளை நிற பேஸ்ட் முதலில் பூசப்படுகிறது. அதன் மேலேயே பச்சை நிற பேஸ்ட்டுடன் ஊதா நிற பேஸ்டை சேர்த்து முகம் மற்றும் தோள்பட்டைகளில் பூசப்படுகிறது. 

இதுதொடர்பாக கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக் மேக்கப்புக்கான அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *