அமெரிக்காவில் புயலின் தாண்டவம்! 17 லட்சம் பேர் வெளியேற்றம்!

வாஷிங்டன், செப்.14- அமெரிக்காவை,  எந்த நேரத்தில் “புளோரன்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும். இந்தப் புயல். கடுமையான உயிருடற்ச் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது என்பதால் மக்கள் மத்தியில் கடும் பீதி நிலவுகிறது.

இந்நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தப் புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜினியா ஆகிய மாநிலங்களை மிகக் கடுமையாக தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

193 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் இப்புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வானிலை இலாகா கணித்துள்ளது.

எனவே, 3 மாநிலங்களிலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் பேரை வெளியேற உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும்,  இந்தப் புயலினால் ஏராளமான கட்டடங்கள், வாகனங்கள் சாலைகள், மின் கம்பங்கள் சேதம் அடையும்.  கடல் கொந்தளிப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து வெள்ள அபாயம் ஏற்படும் என  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று தெற்கு சீன கடல் பகுதியில் “ஓம்போங்” என்ற புயல் உருவாகி உள்ளது. இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸை வரலாறு காணாத அளவில் தாக்கும் என்றும் அதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் புயலின் தாண்டவம்! 17 லட்சம் பேர் வெளியேற்றம்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *