அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெறலாம் என வடகொரிய அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக பெர்ன், டாவோஸ் மற்றும் ஜெனீவா நகரங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யும் பொருட்டு வடகொரியா அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் அடுத்த சந்திப்பு தொடர்பில் எதையும் உறுதிப்படுத்தாத நிலையில்,

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின.

சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது கிம் ஜாங் உன் அளித்த உறுதியை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு அமையலாம் என கூறப்பட்டது.

வெள்ளியன்று வடகொரியா சென்ற அமெரிக்க செயலர் Mike Pompeo, இது தொடர்பில் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா தரப்பில் அடுத்தக்கட்ட சந்திப்பானது நியூயார்க் நகரில் வைத்து நடத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

வடகொரியாவை பொறுத்தமட்டில் சுவிட்சர்லாந்தாக இருந்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

காரணம் கிம் ஜாங் உன் தமது பாடசாலை காலம் முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் பெர்ன் மாகாணத்தில் தங்கியிருந்துள்ளார்.

மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தெரிவு செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.

வரலாற்று சிறப்புமிக்க ரொனால்ட் ரீகன் மற்றும் மைக்கேல் கோர்பச்சேவ் சந்திப்பானது 1985 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

மட்டுமின்றி வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையேயான போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு சிறிய அளவில் சுவிட்சர்லாந்தும் காரணமாக அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி முதற் சந்திப்பிற்காக சிங்கப்பூரை தெரிவு செய்யும் முன்னர் வடகொரியாவின் தெரிவு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகராகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *