அமைச்சருக்கு இறந்த மாட்டுடன் கொலை மிரட்டல் கடிதம்; ஜொகூரில் நபர் கைது!

Please log in or register to like posts.
News

சிம்பாங் ஜெராம்,டிச.06- கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலியல் அமைச்சர் டத்தோ சாலாஹுடின் அயூப்பிற்கும் அவரது சிறப்பு அதிகாரிக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது.

அந்தக் குறிப்புடன் இறந்த மாட்டின் உடலும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் முன் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாட்டிற்கு சிவப்பு துணி சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மாட்டு உடலுக்குப் பக்கத்தில் இருந்த கடிதத்தில், “என் மாடு அடிப்பட்டு இறந்து விட்டது. உன்னை நான் கொல்லப் போகிறேன். உனக்கு புத்தியில்லை. இந்தா பாராங்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில், 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“உதவிக் கோரி அந்த ஆடவர் விவசாய அமைச்சுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார். அவர் கேட்ட உதவி கிடைக்கவில்லை. அதனால், அவருக்கு விவசாய அமைச்சு மீது அதிருப்தி” என்று ஜொகூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் கமாலுடின் காசிம் தெரிவித்தார்.

“இந்நிலையில் அந்த மாடு வேறு அடிப்பட்டு விட்டதில். இதனால் அவருக்கு கடும் கோபம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்த ஆடவரின் விண்ணப்பம் பரிசீலினையில் இருப்பதாக அமைச்சர் சாலாஹுடினின் சிறப்பு அதிகாரி முகமட் ஹுரிடின் சமூரி கூறினார். “இன்று கேட்டு நாளையே எல்லாம் கிடைத்து விடுமா?” என்ற ஹுரிடின் அந்த ஆடவர் கேட்ட உதவியை விரைந்து செய்யுமாறு ஏற்கெனவே கால்நடைத் துறைக்கு கடிதம் அனுப்பிவிட்டதாக சொன்னார்.

The post அமைச்சருக்கு இறந்த மாட்டுடன் கொலை மிரட்டல் கடிதம்; ஜொகூரில் நபர் கைது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *