அமைச்சு பதவியிலிருந்து முகமட் ஹாஸிக் இடை நீகம் செய்யப்பட்டார் !

புத்ரா ஜெயா, ஜூன்.13- பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடன்  ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள முகமட் ஹாஸிக் அப்துல் அஸிஸ் எனும் நபரை தனது தனிப்பட்ட செயலாளர் பதவிலிருந்து இடை நீக்கம் செய்து விட்டதாக மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்கினி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இத்தகவலை உறுதிப்படுத்திய அவர், இவ்விவகாரம் தொடர்பில் காரணம் கோரும் கடிதம் முகமட் ஹாஸிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்க மூன்று நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறினால் அமைச்சு அவரை பதவியிலிருந்து நிரந்திரமாக நீக்கி விடும் என்றும் கூறியுள்ளார்.

நான் பணி நிமித்தமாக மியன்மாருக்கு சென்று நேற்று தான் நாடு திரும்பினேன். செவ்வாய்கிழமை கூட பணி காரணமாக வரை தொடர்பு கொள்ள முற்பட்ட போது தொடர்பு கிடைக்க வில்லை. நாடு திரும்பியதும் இவ்விவகாரத்தை கேள்வியுற்று அவரை எனது அலுவலகத்தில் சந்திக்கமாறு வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை தான் பேசிய காணோளி வெளிவந்த பிறகு ஹாஸிக்கை யாரும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. பணிக்கும் வராததல், அறிவிப்பு இன்றிய விடுமுறை என கணக்கிடப்பட்டுள்ளது. தகவல் அறிய அமைச்சு குடும்பத்தினரை அணுகிய போது , அவர்களும் முகமட் ஹாஸிக்கை தொடர்பு கொள்ள முடியவில்லையென்று கூறியுள்ளனர்.

மேலும் நான் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கி முகமட் ஹாஸிக்கின் நடவடிக்கைகளை கவனித்து வருகின்றேன். எனது செயலாளர் பணிக்குப் பலர் விண்ணப்பித்திருந்தனர். பல தேர்வுகளை கடந்து தான் அவர் தேர்வு செய்யப்பட்டார். தனிப்பட்ட முறையில் அவரிடம் இது போன்ற சுபாவங்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நாங்கள் இருவரும் ஒரு முறை பணி நிமித்தமாக சவுதி அரேபியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டோம். அப்பொழுது கூட அனைத்தும் சரியாக தான் இருந்தது எனவும் அமைச்சர் விவரித்துள்ளார்.

The post அமைச்சு பதவியிலிருந்து முகமட் ஹாஸிக் இடை நீகம் செய்யப்பட்டார் ! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *