அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி – ஹஸ்ரத்துல்லா அதிரடியால் ஆப்கானிஸ்தான் 278 ரன் குவித்து சாதனை

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஹஸ்ரத்துல்லா அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் 278 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 236 ஆக இருந்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *