அரியானா 2-வது இடத்துக்கு முன்னேறுமா? பெங்கால் வாரியர்சுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி அரியானா ஸ்டீலாஸ் அணியுடன் மோதவுள்ளது.

Pro Kabaddi 2019, Bengal Warriors, Haryana Steelers, புரோ கபடி 2019, பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலாஸ்

புரோ கபடி 2019

புனே:

7-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 9-வது கட்ட ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நேற்று ஒரு வழியாக தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி புனேயுடன் 36-36 என்ற கணக்கில் டை செய்தது.

தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த போட்டியில் ஜெய்ப்பூரிடம் தோற்றது. அதில் இருந்து தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுவும் வெற்றி பெற முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 11 தோல்வி, 3 டையுடன் 30 புள்ளிகள் பெற்று தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 97-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – அரியானா ஸ்டீலாஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்கால் 9 வெற்றி, 4 தோல்வி, 3 டையுடன் 58 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், அரியானா 10 வெற்றி, 4 தோல்வி, 1டையுடன் 54 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளன.

அரியானா அணி பெங்காலை வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெங்கால் அணி பதிலடி கொடுத்து 2-வது இடத்திலும் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *