அல்லோலப்படும் கிளிநொச்சி பூங்கா!

கிளிநொச்சி இலங்கை வங்கியின் பிற்பகுதில் அமைந்துள்ள பூங்காவில் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமால் தமது ஆண், பெண் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பெற்றோர் தமது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் அவர்களை வாழ வைப்பதற்கு படும் கஸ்டங்கள்,சொல்லன்னா துயரங்களை பிள்ளைகள் அறிவார்களா? என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மரியாதைக்குரிய தனியார் கல்வி வகுப்பு நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகளின் இவ்வாறான போக்கு தொடர்பில் கண்காணித்து, அவர்களை நல்வழியில் செல்ல வைப்பது, அவர்களின் கடமை எனவும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியின் நேரடி கண்காணிப்பில் உள்ள குறிப்பிட்ட பூங்காவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாதவாறு கண்காணித்து கொள்ளவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீண்டும் இப்படியான நிகழ்வுகள் நடைபெறும் இடத்து குறித்த இடத்தில் காணப்படும் மாணவர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மேலும் கூறியுள்ளனர்.