அஸ்மின் கணக்கில் ரிம. 3 மில்லியன் – வங்கி ரசீது போலியானது

கோலாலம்பூர், ஜூன் 13 – அஸ்மின் அலியின்  மேபெங்க் வங்கிக் கணக்கில் யுஇஎம் நிறுவனம் செலுத்தியதாகக் கூறப்படும் பணத்திற்கான ரசீது போலியானது என அந்த வங்கி அறிவித்துள்ளது.

அனைத்துலக நிதி பரிமாற்ற நடைமுறையில் 2017 டிசம்பர் 19ஆம் தேதியன்று 741,440 அமெரிக்க டாலர்(ரிம. 3.1 மில்லியன்) பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் மேபேங்க் கணக்கில்   செலுத்தப் பட்டதாக வெளியிடப்பட்ட வங்கி ரசீது போலியானது என அது குறிப்பிட்டுள்ளது.

மேபேங்க் வங்கி வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்ட ஆவண நகலில் காணப்பட்ட  கணக்கின் எண் உண்மையானது அல்லவெனவும் தமது நிறுவனத்துக்கு மேபேங்க் தலைமையக கிளையில் கணக்கு எதுவும் இல்லை. வெளியிடப்பட்டுள்ள கணக்கிலும் நிறுவனத்திற்கு எந்தப் பணமும் இல்லை என  குறிப்பிட்டுள்ளது.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம், அஸ்மினின் மேபேங்க் வங்கிக் கணக்கில் யுஇஎம் 3 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தியதாகவும் அதனை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வேண்டுமெனவும் செவ்வாயன்று புகார் கொடுத்திருந்தார்.

The post அஸ்மின் கணக்கில் ரிம. 3 மில்லியன் – வங்கி ரசீது போலியானது appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *