ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 3-1 என வீழ்த்தியது இந்தியா

Please log in or register to like posts.
News

தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் சீனாவை 3-1 என இந்தியா வீழ்த்தியது. #AsiaHockey #AsianWCT

தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது.

இந்தியா இன்று தன்னை விட அதிக தரவரிசையில் உள்ள சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. வந்தனா கட்டாரியா 4-வது மற்றும் 11-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். குர்ஜித் கவுர் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். சீன வீராங்கனை வென் டான் 15-வது நிமிடத்தில் ஒரு கோல்அடித்தார். இதனால் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியா, நாளை அடுத்த போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-2 என ஜப்பானை வீழ்த்தியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *