ஆட்டநாயகன் விருதை தனது குட்டி ரசிகருக்கு வழங்கிய டேவிட் வார்னர் -ருசிகர தகவல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது ஆட்டநாயகன் விருதினை அவரது குட்டி ரசிகருக்கு வழங்கினார்.

 டான்டன்:

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ரன்னில் அவுட்டாகினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினை, மைதானத்தில் இருந்த தனது குட்டி ரசிகருக்கு கொடுத்துள்ளார். மேலும் அந்த விருதுடன் தனது கையெழுத்தினையும் இட்டு மகிழ்ச்சியாக கொடுத்துள்ளார்.

வார்னரின் இந்த செயலை உலக கோப்பை கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. இதனையடுத்து வார்னரின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *