ஆணவக்கொலையால் கணவனை இழந்த அம்ரூதா…. குழந்தையுடன் கொஞ்சி சிரிக்கும் காட்சி!

தெலுங்கானா மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பிரணவ்-அம்ரூதா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகள் குடும்பத்தாரால் கர்ப்பமாய் இருந்த மனைவியின் கண்முன்னே கணவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆணவக்கொலையினை பலரும் கண்டித்து வந்தனர். இதன்பின்பு அம்ரூதாவிற்கு குழந்தை பிறந்தது.

தற்போது அம்ரூதா தன் குழந்தையுடன் கொஞ்சும் வீடியோ வைரலாகியுள்ளது. குழந்தைக்கு நிகலன் பிரண்வ் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனை பார்த்த இணையதளவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *