ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாக நோக்கியா 8.1 இருக்கிறது.

ஏற்கனவே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அப்டேட் வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ரய்டு 10 இயங்குதளம் கூடுதல் பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.

புதிய அப்டேட் மூலம் டார்க் மோட், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோக்கஸ் மோட், பிரத்யேக பிரைவசி பகுதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெர்ஷன் 4.15பி மொத்தம் 1.44 ஜி.பி. அளவில் கிடைக்கிறது. இத்துடன் செப்டம்பர் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.


நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2246×1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்

– அட்ரினோ 616 GPU

– 4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி

– 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆன்ட்ராய்டு 9.0 பை

– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS

– 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்

– 20 எம்பி செல்ஃபி கேமரா

– கைரேகை சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3500 எம்ஏஹெச் பேட்டரி

– ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *