நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக நடத்தப்படும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இரண்டு கேரள பெண்கள் மற்றும் கனடாவை சேர்த்த ஒரு தமிழ் பெண் சுசானா ஆகியோர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்டு வருகின்றனர்.

இன்று சுசானாவின் மகனை நேடனை ஆர்யா சந்தித்து பேசினார். பின் ஒரு நாள் முழுவதும் குழந்தையுடன் செலவிட்டார். ஆனால் நேடன் ஆர்யாவுடன் சரியாக பேசாமல் பழகாமல் ஒதுங்கியே இருந்தான். அது ஆர்யாவிற்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.

நான் புதிது என்பதால் அவன் என்னுடன் நெருங்காமல் இருக்கிறான். அது சரியாகிவிடும் என நினைக்கிறேன் என ஆர்யா கூறினார்.