ஆர்.கே சுரேஷின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியது

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கத்தில் ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

சலீம், தர்மதுரை ஆகிய படங்களின் தயாரிப்பாளரும், தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களின் வில்லன் நடிகருமான ஆர்.கே.சுரேஷ். தற்போது பில்லா பாண்டி மற்றும் வேட்டை நாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கத்தில் ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது.

செய்தி மூலப்பிரதி – newJaffna.com Rss

Loading...