ஆவா குழுவின் பிரதான தலைவர் சுவிஸில் உள்ளார்: வெளியான அதிர்ச்சித் தகவல்

Please log in or register to like posts.
News

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை செயற்படுத்தும் பிரதான நபர்களில் ஒருவர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபரால் ஆவா குழு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்கமைய மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவை செயற்படுத்தும் பிரதான நபர் 22 வயதுடையவராகும். அவரது பெயர் தாஸ் எனக் கூறப்படுகிறது.

ஆவா குழுவை உருவாக்கிய நபர் சுவிட்சர்லாந்தில் உள்ளார். இந்நிலையில், தாஸின் மாமா என்பவரே சுவிட்சர்லாந்தில் குடியேறியவர் என்றும் அவர் ஊடாக இந்த குழு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அஜந்தன் என்பவர் ஆரம்பத்தில் ஆவா குழுவை உருவாக்குவதற்கு பணம் உட்பட பல உதவிகள் வழங்கிய போதிலும், அஜந்தனிடம் ஆவா குழு மோசடி செய்தமையினால் அவர் அந்த குழுவை இயக்கும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

தாஸ் கைது செய்யப்படும் வரையிலும் ஆவா குழுவில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாஸிடம் கிடைத்த தகவல்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு தொடர்பில் இன்னமும் பல தகவல்கள் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *