இங்கிலாந்து, இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே இப்படியொரு சோதனையா?: ரசிகர்கள் கலக்கம்

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து, இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற வியாழக்கிழமை (30-ந்தேதி) இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடருக்கு முன் ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி இந்தியா நேற்று முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 179 ரன்னில் சுருண்டது. டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா (2), தவான் (2), விராட் கோலி (18), லோகேஷ் ராகுல் (6) சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 297 ரன்கள் குவித்தது. பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 283 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

பலமான பேட்டிங் ஆர்டரையும், தலைசிறந்த பந்து வீச்சு யூனிட்டையும் வைத்துள்ள இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று எனக் கருதப்படுகிறது ஆனால் பயிற்சி ஆட்டத்திலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பைக்குச் செல்லும் அணிகள் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களைத்தான் கொண்டு செல்லும். ஆனால் ரன் குவிப்புக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் 179 ரன்ளில் சுருண்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்கள் அதன் சொந்த மைதானத்தில் ரன்களை மலைபோல் குவித்து எதிரணியை ஆட்டம் காண வைத்து விடுகிறார்கள். ஆனால் நேற்று ஆஸ்திரேலியாவிடம் சிக்கிச் கொண்டதது. இதனால் முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறாமல் போய் விடுமோன? என்று ரசிகர்கள் மனதில் கவலை தொற்றிக் கொண்டது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *