இதற்காக தான் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தேன்.! கணவனின் வாக்குமூலம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் மருதையா. இவரது மகனின் பெயர் மாரியபப்பன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., அங்குள்ள புதுக்கிராமம் பகுதியை சார்ந்த சண்முகப்ரியா என்ற பெண்ணிற்கும் – மாரியப்பானுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த சில மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில்., தற்போது சண்முகப்ரியா கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில்., இன்று காலையில் நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததை அடுத்து., மாரியப்பனின் சகோதரி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். இந்த நேரத்தில்., வீட்டின் காதவானது உள்தாளிட்டு இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னலை உடைத்து பார்க்கவே சண்முகப்ரியா மற்றும் மாரியப்பன் இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான அவர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வீட்டிற்கு வந்துகாதவை உடைத்து பார்த்த சமயத்தில் மாரியப்பன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து இவரை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., சண்முகப்ரியாவை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாரியப்பன் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினமும் மனைவி பணிக்கு செல்ல கூறி சொல்லி வந்த நிலையில்., இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைப்போன்றே நேற்றும் நடந்த தகராறில் ஆத்திரமடைந்த நான் எனது மனைவியை கொலை செய்து., நானும் தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்தார். இந்த தகவலானது பெரும் அதிர்வலையை அங்குள்ள பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *