‘இது உனக்கு சலிக்கவில்லையா’ இளைஞர் தாயிடம் கேட்ட கேள்வி…காரணம்?

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட வார்த்தைகள் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர், CPM அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார்.

பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட வயத்திற்கு பின் தனது திருணம் என்பது குறித்து பொதுவெளியில் பேச தயங்கும் விடயத்தை நாம் பார்க்கலாம்.

ஆனால், கோகுல்ஸ்ரீதர் அவரின் தாயரின் மறுமணத்தை வித்தியாசமாகவும் ஏற்கொண்டுள்ளார். அதற்கான காரணத்தை பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வார்த்தைகள் ”ஒரு பெண் எனக்காக அவரது வாழ்க்கையை ஒதுக்கி வைத்துள்ளார். அவள் தனது திருமணத்தின் மூலம் அதிக துன்பங்கள் அனுபவித்துள்ளாள். ஒருநாள் அடிவாங்கி கொண்டு தலையில் ரத்தம் சொட்டும் போது அவளிடம் கேட்டேன் இது உனக்கு சலிக்கவில்லையா என்று. அவள் என்னிடம் நான் உனக்காகதான் வாழ்கிறேன் என்று தெரிவித்தால். அன்று அவளுடன் புறப்பட்டுவிட்டேன். அன்றுதான் நான் முடிவு செய்தேன், என்தாய் எனக்காக அவள் இளமையை தியம் செய்தாள் அவள் கனவை அடைய வேண்டும் என்று. இதில் மறைக்க என்னிடம் ஒன்றும் இல்லை… Mother, happy married life”. என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு மிகம் வைரலாகி பலரது வாழ்த்துகளை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *