இந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு கதையுண்டு: அப்படியென்ன கதை

பெய்ஜிங், ஜன.11- தொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி அறுவைச் சிகிச்சையை செய்து முடித்ததும் ஆப்ரேசன் மேஜையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். ஆனாலும் அவரது கடமையிலிருந்து அவர் தவறவில்லை.

சீன மருத்துவரான லியூ ஷான் பெங் தொடர்ந்து ஓய்வின்றி 20 மணிநேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப் பட்டாலும் தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் ஆப்ரேசன் மேஜையிலேயே அயர்ந்து உறங்கும் புகைப்படம் அவரை அதிக பிரபலமாக்கி விட்டது.

புலம் பெயர்ந்த நோயாளி ஒருவரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து விட்டு அந்த ஆப்ரேசன் மேஜையிலேயே ஷான் பெங் சாய்ந்து தூங்குவதை அந்தப் படம் காட்டுகிறது.

அவர் தூங்கினாலும் ஒட்ட வைத்த கையை பிடித்தவாறே தூங்குகிறார். அந்தப் புகைப்படம் சீனாவின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில் படுவேகத்தில் வைரலானது.

அதற்கு முன் ஐந்து அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்திருக்கிறார். ஆறாவது அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது. ஐந்து அறுவை சிகிச்சைகளை முடித்த பின் கை துண்டான ஒருவரை சிலர் தூக்கி கொண்டு வர களைத்து போனாலும் களைப்பையும் மீறி பொறுப்புணர்வோடு அவருக்கு அறுவைச் சிகிச்சையை செய்ய முடித்தார் ஷான் பெங்.

அந்த நோயாளிக்கு அப்போது அறுவைச் சிகிச்சை செய்யாதிருத்தால் அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும்.  அவர் தூங்கும் படத்தைக் காட்டி அது குறித்துக் கேட்டால் சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன். ஆனால் தூங்கி விடுவேன் என்று நினைக்கவில்லை.

அந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்கு முன் அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவித்தார்.

The post இந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு கதையுண்டு: அப்படியென்ன கதை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *