இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் போர் விமானங்கள்..!

பாகிஸ்தானின் லாகூரில்இருக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு தகவல்…`இந்தியவிமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் வான்வழியில் பறக்கிறது.

உடனே பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எஃப் -16 ரக போர் விமானங்களை அனுப்பியது.

எனினும் பாகிஸ்தான்அதிகாரிகளுக்கு அதில் குழப்பம் காரணம், குறிப்பிட்ட அந்த விமானம் வெளியிடும் சமிக்ஞை,இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் என்பதை காட்டுகின்றபோதும் ஆனால், விமானத்திட்டத்தின் படியும் விமானியின் எண் அடிப்படையிலும் அது ஒரு பயணிகள் விமானம் என அவர்களின் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் இந்தியவிமானத்தை நெருங்கிய பாகிஸ்தான் போர் விமானம் தாழ்வான உயரத்தில் பறக்கும்படியும், விமானத்தின்தகவலைத் தரும்படியும் ஆணையிட்டது.

இதைத் தொடர்ந்துஇந்திய விமானத்தின் விமானி, இது ஒரு பயணிகள் விமானம் என விமானம் குறித்த தகவல்களை அளித்தார்.இதைத் அடுத்து அது பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்த பாகிஸ்தான், குறிப்பிட்ட அந்தவிமானம் பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் வரை சுமார் 30 நிமிடங்கள் உடன் சென்று பின்னர்திரும்பியது.

இந்த பரபர சம்பவம்நடைபெற்றது செப்டம்பர் 23.

உண்மையில் பாகிஸ்தான்வான்பகுதியில் பறந்தது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமே.. குறிப்பிட்டஅந்த விமானம் டெல்லியிலிருந்து காபூல் நகருக்கு 120 பயணிகளுடன் பயணமாகியுள்ளது. ஆனால்,அது அந்த விமானத்தின் சிக்னல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது.

இந்தச் சம்பவம்தொடர்பாக பேசிய இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரக அதிகாரிகள், “குறிப்பிட்ட இந்த விமானம்முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்துள்ளது.

அதன்பின்னர் அதைவாங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதைப் பதிவு செய்வதற்காக இந்திய டி.ஜி.சி.ஏ என்னும் சிவில்ஏவியேஷன் இயக்குநரகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு சர்வதேசவிமான போக்குவரத்து ஆணையத்தின் விதிப்படி, ஒரு விமானத்தைப் பதிவுசெய்யும்போது அவற்றுக்கு23 இலக்குகள் கொண்ட ஒரு ஆல்பா- எண்னை வழங்கும். அந்த `கோட்’-ஐசமிக்ஞையாக விமானம் ட்ரான்ஸ்மிட் செய்யும். இந்த எண்ணுக்கு மோட்-எஸ்(Mode-S) என்றுபெயர்.

இப்படி குறிப்பிட்டஇந்த விமானத்தைப் பதிவு செய்யும்போது இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் பணியாற்றும்ஒருவர் தவறுதலாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என் -32 என்னும் விமானத்துக்குவழங்க வேண்டிய எண்ணை தவறுதலாக இந்த விமானத்துக்கு வழங்கியுள்ளார்.

இதன் காரணமாகவேஇந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அந்த அதிகாரி சஸ்பெண்டுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தவிவகாரத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாண்ட பாகிஸ்தான் விமானபோக்குவரத்து ஆணையத்துக்கு இந்திய விமானத்துறை செயலாளர்நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தச்சம்பவத்தை தொடர்ந்து விமானங்களுக்குப் பதிவு எண்களை வழங்கும்முறையை கணனிமயமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது விமானத்துறை.

இதற்கான பணி டி.சி.எஸ் நிறுவனத்துக்குவழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாகமோடு-எஸ் சிக்னலை எந்தநாடும் டிராக் செய்யமாட்டார்கள். ஆனால்இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர், எல்லைபிரச்னை, பால்கோட் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் உச்சத்தில் இருந்ததால் இந்த விமானத்தின் மோட்-எஸ் சிக்னலை ட்ராக்செய்துள்ளனர்.

அதில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானவிமானம் என்று தெரிய வந்தாலும்மற்ற குழப்பங்கள் காரணமாக அமைதியாகச் செயல்பட்டுள்ளனர்.மேலும், குறிப்பிட்ட விமானத்தைப் பயணிகள் விமானம் என்றுஉறுதி செய்ததும் ஆப்கானிஸ்தான் எல்லை வரைக்கும் சென்றுவழியனுப்பி உள்ளனர்.

அத்துடன் இந்தியப்பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி 12 வருடஅனுபவம் கொண்டவர். இதனால் அவர் பதற்றமடையாமல்விமானத்தை இயக்கியுள்ளார் என்கிறார் மற்றோர் அதிகாரி.

இந்நிலையில்இந்த விமானம் காபூலுக்குச் செல்லும்முன், கொழும்பு மற்றும் பாங்காக் ஆகியநாடுகளுக்கும் சென்று வந்துள்ளது. ஆனால்,அப்போது யாரும் இந்த எண்குழப்பத்தைக் கணிக்கவில்லை.

பாகிஸ்தான்,பயணிகள் விமானம் என்பதை உறுதிசெய்ததை தொடர்ந்து காபூலிலிருந்து அந்த விமானம் டெல்லிதிரும்பும்போது அதற்கான அனுமதி பாஸைஅளித்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போதுவெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *