இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து அரேபியரால் சர்ச்சை! -video

அபுதாபி. ஜன.12- அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடர் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.  இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சில இந்தியர்கள் பறவைக் கூட்டில் அடைப்பட்டுக் கிடக்கின்றனர்.

வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு அடைபட்டுக் கிடப்பவர்களிடம் “யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்?’ என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள் ‘இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம்” என்கின்றனர்

“நீங்கள் இங்கே தான் வசிக்கிறீர்கள், அதனால் அமீரகத்துக்கு தான் சப்போர்ட் செய்ய வேண்டும்” என கூறுகிறார். உடனே அவர்கள், “நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோவில் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தஉத்தரவிட்டிருப்பதாக
கூறியுள்ளார்.

இந்நிலையில் அரபு நபர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில் ”நான்  உள் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை. விளையாட்டாக செய்தேன். இவர்கள் எனது தோட்டத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவோம்” எனக் கூறியுள்ளார்.

The post இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து அரேபியரால் சர்ச்சை! -video appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *