இந்திய அணிக்கு தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் உண்மையான சோதனை அல்ல- வெங்கடேஷ் பிரசாத்

தற்போதைய ஆஸ்திரேலிய அணி 1990-களில் இருந்தது போன்றது கிடையாது. இந்த தொடர் இந்தியாவிற்கு உண்மையான சோதனை அல்ல என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றி, ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக தொடரை வென்று சாதனைப் படைத்தது. ஸ்மித், வார்னர் இல்லாத பலவீனமான ஆஸ்திரேலிய அணி என்று கூறி வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி, 1990-களில் இருந்த பலம் வாயந்த அணியை போன்று கிடையாது. அதனால் இத்தொடர் இந்தியாவிற்கான உண்மையான சோதனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் ‘‘முதலில் இந்திய அணியின் வெற்றிக்கும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் கடும் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியை 1990-களில் இருந்த அணியோடு ஒப்பிட முடியாது. மார்க் வாக், ஸ்டீவ் வாக், பிரெட் லீ, ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களை கொண்ட அணி.

இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தொடரை வென்றது உண்மையான சோதனை இல்லை என்பேன்’’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *