இன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி எஸ்10 லைவ் புகைப்படம்

Please log in or register to like posts.
News

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10 #smartphone

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன. சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது.

இந்த குறையை தீர்க்கும் வகையில் கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 லைவ் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்படுவதை போன்று கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் இன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சிறு துளையினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதனால் டிஸ்ப்ளேவுக்கு அதிக இடம் கிடைக்கிறது. ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ போன்று கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 மாடலிலும் மற்ற கைப்பேசி அல்லது வாட்ச்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படலாம்.

கேலக்ஸி எஸ் 10 சீரிசின் பேஸ் மாடலாக பியான்ட் 1 இருக்கும் என்பதால், இதில் ஒற்றை செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதன் பிளஸ் வேரியன்ட்டில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மேல்பக்கம் மற்றும் கீழ்புறங்களில் முந்தைய கேலக்ஸி எஸ்9 மற்றும் நோட் 9 மாடல்களை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் எக்சைனோஸ் 9820 சிப்செட், டிரை-கிளஸ்டர் சி.பி.யு, இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு., அதிகபட்சம் நொடிக்கு 2 ஜி.பி. (2Gbps) எல்.டி.இ. மேம்படுத்தப்பட்ட ப்ரோ மோடெம் வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *