இன-மத உணர்வை தூண்டி லாபம் தேடும் அரசியல்வாதிகள்! – ஐஜிபி சாடல்

கோலாலம்பூர், ஜூன்.13- இன, மத பாகுபாடுகளை பயன்படுத்தி வெறுப்புணர்வை தூண்டி லாபம் தேடுவது  அரசியல்வாதிகள் தான்  மலேசிய காவல்ப் படைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் அவ்வபோது ஏற்படும் சில சர்ச்சை நிகழ்வுகளுக்கு ஒரு சில அரசியல்வாதிகள் காரணமாக அமைகின்றனர். அவர்கள் தங்களுக்கு அரசியல் லாபம் தேடிக் கொள்ள இன , மத விவகாரங்களை கிளப்பி விட்டு பிளவு ஏற்படுத்துகின்றனர். அனைத்து கட்சிகளிலும் இது போன்றவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.

அவர்களுக்கு (பொறுப்பற்ற அரசியல்வாதிகள்) நிரந்திர அரசியல் கொள்கைகள் இல்லை. ஒருநாள் இங்கே தாவுகிறார்கள். மறுநாள் அங்கே தாவுகிறார்கள். பச்சோந்தியை போல் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். நாட்டில் இன, மத பிளவுபாடுகள் ஏற்பட்டால் நாம் முன்னேற்ற பாதையில் பின்னடைவோம் என அவர் சாடியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நான் சிறப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த போது நாங்கள் தேசிய பாதுகாப்பு மன்றம், மத – சமய பிரதிநிதிகள்,சமுதாய தலைவர்கள் ஆகியோர்களை தொடர்பு கொண்டு அரசியல்வாதிகளின் இன- மத “விளையாட்டுகள்” குறித்து எச்சரித்துள்ளோம்.

அதே சமயம் இனம், மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாது. அவர்களின் விமர்சனங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் அடிப்படையில் தான் நடவடிக்கை மேற்கொள்வோம் எனக் கூறிய டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர்.   ஐஎஸ்ஏ சட்டத்தின் கீழ் தற்போதைய அமைச்சர் திரேசா கோக் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையே தற்போதைய அரசாங்கம் விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பது பாராட்டுதலுக்குரியது. தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதே ஜனநாயகம். ஆனால் முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் எல்லை உண்டு. அதை மீறினால் காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.

The post இன-மத உணர்வை தூண்டி லாபம் தேடும் அரசியல்வாதிகள்! – ஐஜிபி சாடல் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *