இரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

Please log in or register to like posts.
News

திருப்பூரில் கட்டட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கட்டட பணி முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். ராஜாமணி மற்றும் கிருஷ்ண மூர்த்தி இருவரும் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் பணியில் இருந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி அளவுகோலைக் கொண்டு மாடியில் அளவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

எதிர்பாராத விதமாக மின் கம்பத்திலிருந்து சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பு ஸ்கேல் மோத, கிருஷ்ணமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை காப்பாற்ற முற்பட்ட ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தியை இழுக்கையில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *