இலங்கையில் ரணிலின் ஆட்சியைக் கலைக்க அதிபர் சிரிசேனா திட்டம்?

Please log in or register to like posts.
News

கொழும்பு, அக்.18- இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சியைக் கலைக்கும்படி அதிபர் சிரிசேனாவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறதுள்ளது. இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

அரசாங்கத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும் அதிபர் மைத்திரிபால சிரிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 கட்சிகளுக்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு முற்றிவிட்டது.

இதனால் கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் கொள்கை உருவாக்க மத்திய கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது.

அதில் தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிரிசேனாவும் சந்தித்து பேசினார். அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்கி உள்ளார். இந்நிலையில் தற்போது பிரதமர் ரணில் தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு பதவிக் காலம் முடிவடைய உள்ள 2020ஆம் ஆண்டுக்கு முன்பே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் ஆதரித்தனர். ரணிலின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள 16 அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே அதிபர் சிரிசேனாவுக்கு இது குறித்து கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடி காரணமாக கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலகும் முடிவை சிரிசேனா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இலங்கை சுதந்திரா கட்சியில் அமைச்சர்கள் சிலர் கூட்டணி அரசில் இருந்து பதவி விலகினர். பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சி எம்பிக்கள் உதவுயுடன் ரணில் விக்ரமசிங்கே முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் ரணிலின் ஆட்சியைக் கலைக்க அதிபர் சிரிசேனா திட்டம்? appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *