இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பில் தமிழகத்தில் திடீர் சோதனை….

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் பயங்காரவாதிகளால் தற்கொலை குண்டுத்தாக்குதல் 8 இடங்களில் அடுத்தடுத்தாக நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான அப்பாவி மக்களும் குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினார்.

இதனை தொடர்நத பல இடங்களில் இந்தியாவிலும் பயங்கரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை திடீரென கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் இவர்களின் வலைதள பக்கங்களில், இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகளை சம்பந்தப்படுத்துவது போல விவரங்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும், சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *