இல்லறத்தில் கசப்பு., ஏன் இந்த அவலம்., என்பதை அறிவீர்களா?

இன்றுள்ள பெரும்பாலான இடங்களில் தொடர்கதையாகி பல குற்ற சம்பவங்களும்., கொலைகளும் அரங்கேறியதற்கான காரணங்கள் கள்ளக்காதல் என்ற பிரச்சனையைத்தான் உள்ளது. என்னதான் திருமணத்தின் போது ஜாதக பொருத்தம்., குலம் மற்றும் கோத்திரம் என்று 16 பொருத்தத்தை பார்த்தாலும் பல கள்ளக்காதல் சம்பவங்கள் வெளியில் தெரிந்தும்., தெரியாமலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் கடைசி வரை துணையுடன் வாழப்போகும் தம்பதிகளின் படிப்பு., அறிவு., அழகு., வேலை., நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து யோசனை செய்து தேர்ந்தெடுக்கும் நபர்கள் மனதை கவனிக்கவும்., மன பொருத்தத்தையும் கவனிக்காமல் செயல்படுகின்றனர்.

மனதை கணக்கில் கொள்ளாமல் திருமணம் செய்து வைத்த பின்னர் தம்பதிக்கிடையே வாழ்க்கை சண்டைகள்., சச்சரவுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு ஒரு சமயத்திற்கு மேலாக பிரிய முடிவு செய்து., இவர்களின் மனதிற்கு ஏற்ற துணைகளை தேடுகின்றனர்.

ஒரு நபரின் வருமானம்., திறமை மற்றும் நோய்கள் குறித்த பிற தகவல்களை மறைத்து., திருமணம் முடித்த பின்னர் இது குறித்த பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில்., தம்பதியினருக்கு இடையே ஏற்படும் விரிசலானது விவகாரத்திற்கோ அல்லது இந்த சமயத்தை மற்றொரு நபர் உபயோக படுத்தும் பட்சத்தில் தவறான உறவு பாதைக்கு அழைத்து செல்கிறது.

எப்பொழுதும் குடித்து கொண்டு சண்டையில் சச்சரவில் ஈடுபட்டு கொண்டு., பணிக்கே செல்லாத கணவன் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக பிற துணையை தேடி தங்களின் பயணத்தை துவங்குகின்றனர். மேலும்., தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி ஏற்படாத துணைகள் தவறான உறவிற்கு செல்கின்றனர். இவை அனைத்தும் மனம் மற்றும் உடல் சார்ந்த காரணங்களாக கூட இருக்கலாம்.

சில காரணத்திற்க்காக திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு., ஏற்படும் ஆசையை தீர்த்துக்கொள்ள பிற திருமணம் முடிந்த துணையை தேடி தவறான பாதையை அடைகின்றனர். கணவன் மற்றும் மனைவி இருவரும் ஏதோவொரு சூழலின் காரணமாக பிறந்திருக்கும் பட்சத்தில்., தவறான பழக்கங்கள் ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *