இளம்பெண்ணை கடத்தி கூட்டு வன்கொடுமை செய்த கொடூரம்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல கொடூரங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் பள்ளி மற்றும் கல்லூரி என்று பணிகளுக்கு செல்லும் பெண்கள் பல விதமான முறையில் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அவ்வாறு நடைபெறும் அநீதிகள் காம கொடூர எண்ணத்தை கொண்ட நன்கு அறிந்த நபர்களால் அரங்கேற்றபட்டு வருகிறது என்பது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில்., பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து., விடியோவை இணையத்தில் பதிவு செய்த கொடூரமானது அரங்கேறியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் கடந்த மாதத்தின் இறுதியில் 30 வயதுடைய பெண்ணொருவர் தனது தோழிகளுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து., தனது தோழிகளுடன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார். இந்த சமயத்தில்., இவர்களை இடைமறித்த காம கொடூர கும்பலானது., திடீரென அந்த பெண்ணை கடத்தி அங்குள்ள காட்டு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து பெண்ணை ஐந்து பெரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில்., விடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்., பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சோகத்தில்., பெண் சம்பவ இடத்திலேயே மயக்கமடையவே., காம கொடூரன்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெண் இருக்கும் கோலத்தை பார்த்து., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்ட சமயத்தில் துப்பு ஏதும் கிடைக்காமல் இருந்த நிலையில்., வீடியோ பதிவை காம கொடூரன்கள் இணையத்தில் பதிவு செய்தனர்.

இதனை அறிந்த காவல் துறையினர்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜித்தேந்திர பட் (வயது 20) , கோவிந்த் பட் (வயது 20), தினேஷ் பட் (வயது 24), மஹேந்திரா பட் (வயது 22) ஐவரை கைது செய்து சிறையிலடைந்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்., பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *