இளம் பெண்ணை நடு வீதியில் வைத்து கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம்!!

இளம் பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட திகில் சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் நடந்துள்ளது.
உறவினர்களுக்கு இடையில் காணிப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக ஏற்பட்ட பிணக்கு கொலையில் முடிந்துள்ளது.
பெண்ணின் பெரியப்பா இந்த துணிகரக் கொலையைச் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்தி விட்டு, பொலிஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சகோதரியைக் கண்ட நபர் அவரைத் துரத்திச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *