இளவரசி மேகன் முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம்….

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து சென்றதற்கான உண்மை காரணம் குறித்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

ராயல் நிபுணர் ஆஷ்லி பியர்சன் மேகன் பற்றி சமீபத்தில் வெளியான ‘மேகன் மார்க்லே: திரைப்படங்கள், திருமணங்கள் மற்றும் தாய்மை’ என்கிற ஆவணபடம் குறித்து பேசியுள்ளார்.

அதில் மேகனின் முன்னாள் கணவரை அவர் பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கல் செப்டம்பர் 10, 2011ம் ஆண்டு ஜமைக்காவில் தன்னுடைய காதலனும், ஹாலிவுட் பட தயாரிப்பாளருமான ட்ரெவோர் ஏங்கல்சனை திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் 2013ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்கான காரணம் என செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியியுள்ள ஆஷ்லி பியர்சன், மேகனும், ட்ரெவோர் ஏங்கல்சனும் 7 வருடங்கள் ஒன்றாக இருந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுடைய திருமணத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டதோடு 4 நாட்கள் வேடிக்கையாக கொண்டாடப்பட்டது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே மேகன் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்காக டொராண்டோவிலும், ட்ரெவோர் ஏங்கல்சன் லாஸ் ஏஞ்சல்ஸிலும் என தனித்தனியாக இருந்தனர்.

இதன் காரணமாகவே இருவரின் உறவும் நீடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இளவரசி மேகன், ஆர்ச்சி என்கிற ஆண் குழந்தை சமீபத்தில் பெற்றெடுத்தார். அதேபோல அவருடைய முன்னாள் காதலன் ட்ரெவோர் ஏங்கல்சன், டிரேசி என்பவரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *