இளைஞர் கழக -விளையாட்டுப்போட்டி!!

Please log in or register to like posts.
News

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்டபட்ட இளைஞர் சம்மேளனத்தின் இளைஞர் விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரசே இளைஞர் சம்மேளன தலைவர் க.லக்சிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு வடமாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், தேசிய இளைஞர் சேவை மன்ற உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *