இழந்ததை பற்றி கவலை இல்லை – ரகுல் ப்ரீத் சிங்

Please log in or register to like posts.
News

இழந்ததை பற்றி கவலை இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியிருக்கிறார். #RakulPreetSingh #Dev

தமிழ், தெலுங்கு என 2 மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ’தேவ்’ பட விழாவில் அளித்த பேட்டி:-

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பது எப்படி?

என்.ஜி.கே, தேவ் என 2 படங்களையும் நான் ஒப்புக்கொண்டபோதே இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடிக்கவும் ஒப்பந்தமானேன். இந்தி படத்துக்கு என்னுடைய கால்ஷீட் மட்டும் 100 நாட்கள் தேவைப்பட்டன. அத்துடன் எனது எடையையும் குறைக்க வேண்டியதாகி விட்டது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌‌ஷன் படம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த மொழி என்பது முக்கியம் அல்ல. தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருக்க வேண்டும். அதுதான் என் குறிக்கோள்.

சூர்யா, கார்த்தி ஒப்பிட முடியுமா?

இருவருமே பெரிய திறமை சாலிகள். இருவருடனும் பணி புரிவது ஜாலியாக இருந்தது. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை.

2 கதாநாயகிகள் கதைகளிலும் நடிப்பது ஏன்?

ஒரு படத்தில் எனது பங்களிப்பை மட்டுமே நான் பார்க்கிறேன். மற்ற நடிகர்களை பற்றி பார்ப்பதில்லை. செல்வராகவனின் பெரிய ரசிகை நான். அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரும்போது அதில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை பற்றி பேச வைக்க அவரால் முடியும்.

சினிமாவை தவிர வேறு என்ன பிடிக்கும்?

உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் அதற்கு ஒதுக்கிவிடுவேன். அடுத்து கோல்ப் விளையாட்டு. மாதத்துக்கு ஒருமுறையாவது விளையாடுவேன்.

இந்த படத்தை இழந்துவிட்டோமே என்றோ இதில் ஏன் ஒப்புக்கொண்டோம் என்றோ வருத்தப்பட்டது உண்டா?

இழந்ததை பற்றி கவலைப்பட்டது இல்லை. ஆனால் சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம் என்று வருத்தப்பட்டுள்ளேன்.

Related Tags :

 ரகுல் பிரீத் சிங் பற்றிய செய்திகள் இதுவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *