உணவை உண்ண மறுத்த மகளுக்கு தண்டனை – தந்தைக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

can_courtமுட்டைகோஸ் போன்ற brussels sprouts என்ற உணவை மகள் சாப்பிட மறுத்ததால் அதை மகள் சாப்பிட்டு முடிக்கும்வரை 13 மணி நேரம் சாப்பாட்டு மேசையிலேயே அமர வைத்து தந்தை தண்டனை வழங்கியுள்ளார்.

இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அந்த தந்தைக்கு 4 மாதங்கள் சமுதாயப் பணியை தண்டனையாக அளித்ததோடு தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு 500 டொலர்கள் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

கனடாவின் Gatineau நகரைச் சேர்ந்த தந்தை தனது எட்டு வயது மகளுக்கு இவ்வாறு தண்டனை வழங்கியிருந்தார்.

எனினும் விருப்பமில்லாத குறித்த உணவை சாப்பிட்டு முடித்ததால் குறித்த சிறுமிக்கு வாந்தி ஏற்பட்டதுடன், சிறுமி நடுக்கத்துடன் காணப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த உணவின் ஒரு பகுதியை மறுநாள் கொடுப்பதற்காக எடுத்து வைத்திருந்ததாகவும் தந்தை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்தே நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.