உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியல் ! இலங்கை எத்தனையாவது தெரியுமா?

உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை அமைதிக்கான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது.

இதில், சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள், நாட்டில் இராணுவத்தின் செயல்பாடு ஆகியவற்றை அளவீடுகளாக கொண்டு 2019-ஆம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக முதல் இடத்திலே இருக்கும் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த முறையும்

உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இலங்கை 72வது இடத்திலும், அண்டை நாடுகளான இந்தியா 141-வது இடத்திலும், நேபாளம் 76-வது இடத்திலும் வங்கதேசம் 101-வது இடத்திலும் உள்ளன.

பூடான் 15-வது இடத்திலும் பாகிஸ்தான் 153-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 9-வது இடத்திலும், அமெரிக்கா 128வது இடத்திலும், ரஷியா 154-வது இடத்திலும் உள்ளது.

பட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன.கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *