உலக கோப்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுவதில் இருக்கும் சிறப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இதில் உள்ள சிறப்பு என்ன என்பதை பார்ப்போம்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணி இருமுறை களம் கண்டது. விராட் கோலி தலைமையிலான  வீரர்களின் அசத்தலான செயல்பாடுகளால் இந்திய அணி மகத்தான வெற்றிப் பெற்றது.

இதேபோல் நியூசிலாந்து அணி களம் இறங்கிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. நான்காவது முறையாக நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.

பயிற்சி ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி, இந்திய அணியை வென்றுள்ளதால் அந்த அணி தைரியமாக களமிறங்க உள்ளது.

இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா-நியூசிலாந்து அணிகள் உலக கோப்பையில் இன்றுதான் களம் காண்கின்றன என்பதுதான். இதற்கு முன் கடந்த 2003ம் ஆண்டு இரு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் மோதின. இதில் இந்தியா வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து இன்றுதான் இரு அணிகளும் மோதவுள்ளன. 2003ம் ஆண்டுக்கு பின்னர் 2007,2011,2015 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற உலக கோப்பை போட்டிகளில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்பு ஏற்படவில்லை.

2003ம் ஆண்டு வரை இந்தியா-நியூசிலாந்து அணிகள் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 4 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *