எத்தியோப்பியாவில் பிரசவித்த 30 நிமிடத்தில் தேர்வு எழுதிய தாய்!

அடிஸ் அபாபா,   ஜூன் 12 – மேற்கு எத்தியோப்பியாவின் மேத்து எனும் பகுதியில் வசிக்கும் அல்மாஸ் டிரெஸ் (வயது 21) எனும் பெண்மணி தன் பிரசவத்திற்கு முன்னரே  அரசாங்கத் தேர்வை எழுத   நினைத்திருந்தாலும், ரமலான் மாதத்தின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை தன் முதல் தேர்வு தொடங்குவதற்கு சற்று முன்னர் தான்  அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார். கல்வி  கற்க  “பிரசவம்” ஒருபோதும் தடையாக  இருந்ததில்லை என்றும் அடுத்த ஆண்டு வரை தான் தேர்வு எழுதக் காத்திருக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

அவர் அன்று  மருத்துவமனையில்  ஆங்கிலம் , பொருளாதாரம்,  கணிதம் ஆகிய   தேர்வுகளை எழுதிய நிலையில்  மீதமுள்ள சோதனைகள் அடுத்த இரண்டு நாள்களில் எழுதவிருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது கணவர், டாடிஸ் துலு, தம் மனைவி மருத்துவமனையில் தேர்வுகள் எழுத பள்ளி அனுமதித்ததாகக்  கூறினார்.  எத்தியோப்பியாவில், இடை நிலைப் பள்ளியிலிருந்து பெண்கள் வெளியேறி  பின்னர் படிப்பைத் தொடர்வதும்  இயல்பானதே.

தம்முடைய பல்கலைக்கழக மேற்படிப்பிற்க்காக  இரண்டாண்டு தயார் நிலைக் கல்வியினை தாம் மேற்கொள்ள இருப்பதாக அல்மாஸ்  குறிப்பிட்டார். தேர்வினை தாம் சிறப்பாகச் செய்ததாகவும் தமது குழந்தை நலமாக இருப்பதாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

The post எத்தியோப்பியாவில் பிரசவித்த 30 நிமிடத்தில் தேர்வு எழுதிய தாய்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *