எனது 3-ஆவது திருமணமும் முறிந்தது!– நடிகை நதாஷா ஹட்சன்

கோலாலம்பூர், அக்.11- நாட்டின் பிரபல நடிகையான நதாஷா ஹட்சனின் மூன்றாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்து விட்டதை அந்த நடிகை உறுதிப்படுத்தியுள்ளார்.

“நான் இப்போது தனியாகத் தான் உள்ளேன். எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி, எனது விவாகரத்து சுமூகமாக நடைப்பெற்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“என்னை மன்னித்து விடுங்கள். எனது விவாகரத்து தொடர்பில் என்னால் இப்போது எவ்வித விவரத்தையும் வெளியிட முடியாது. இதனை நானும் எனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்வதற்கு தேவையான கால அவகாசம் எனக்கு வழங்கப் பட வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நதாஷாவும், Phlowtron பாடகருமான அவரின் கணவர் கர்லீட் காஸா அல்லது காலீட் கமால் ஆகிய இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர் என்று அண்மையில் வதந்திகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, தானும் தனது கணவரும் விவாகரத்து செய்துக் கொண்டுள்ளதாகவும், தாங்கள் இருவரும் இன்னும் நட்புறவோடு பழகி வருவதாக நதாஷா கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதியன்று, இன்ஸ்டாகிராம் எனப்படும் சமூக வலைத்தளத்தில், “தனிமைக்குத் திரும்புகிறேன்..மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்” என்று நதாஷா பதிவு செய்ததை தொடர்ந்து, அவர் விவாகரத்து பெற்று விட்டார் என்று அவரின் ரசிகர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் நலமாக உள்ளேன். என் வாழ்க்கையை நான் எனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர் எனக்கு நல்ல திட்டத்தை வகுத்திருப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று நதாஷா சொன்னார்.

The post எனது 3-ஆவது திருமணமும் முறிந்தது!– நடிகை நதாஷா ஹட்சன் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *