‘என்னைக் கவிழ்க்கச் சதியா?’ – எம்ஏசிசி விசாரிக்கட்டும்! – பேரா மந்திரி புசார்

Please log in or register to like posts.
News

ஈப்போ, டிசம்.07- பேரா மந்திரி புசார் பதவியில் இருந்து தன்னைக் கவிழ்ப்பதற்கு நடந்ததாக கூறப்படும் சதி முயற்சி குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி. விசாரணை நடத்துவதை வரவேற்பதாக மந்திரி புசார் டத்தோஶ்ரீ அகமட் ஃபைசால் அஷுமு தெரிவித்தார்.

இது தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த விவகாரம் குறித்து எம்ஏசிசி விசாரணை நடத்துவதற்கு எல்லா தரப்புமே அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவசியம் ஏற்பட்டால் நான் எனது வாக்குமூலத்தை அளிக்கத் தயாராக இருக்கிறேன்.இது குறித்து எம்ஏசிசி விசாரணை நடத்த நாம் அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த விசாரணையின் அடிப்படையில் அது நடவடிக்கை எடுக்கட்டும் என்றார் மந்திரி புசார் அகமட் ஃபைசால்.

மந்திரி புசாரைக் கவிழ்க்க நடந்ததாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பில் 6 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களை எம்ஏசிசி விசாரணைக்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மந்திரி புசாரை பதவியில் இருந்து வீழ்த்த, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர், தங்கள் அறுவரையும் அணுகியதாகவும் அதன் அடிப்படையில் தங்களுடன் பேராவின் பல இடங்களிலும் கோலாலம்பூரிலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மாநில எதிர்க்கட்சித் தலைவரான டத்தோ சாரனி முகம்மட் (கோத்தா தம்பான்) கூறியுள்ளார்.

 

 

The post ‘என்னைக் கவிழ்க்கச் சதியா?’ – எம்ஏசிசி விசாரிக்கட்டும்! – பேரா மந்திரி புசார் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *