என் தந்தை ஒரு சிறந்த பிரதமராக திகழ்வார்! – நூருல் இஷா

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர், ஜூன்.24 – தனது தந்தை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு சிறந்த பிரதமராக திகழ்வார் என அவரின் மகளும் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவருமான நூருல் இஷா கூறினார்.

ஜனநாயகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது தந்தை தமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக  அவர் சொன்னார். அதோடு, அன்வார் பி.கே.ஆர். கட்சியைத் தொடங்கியதன் மூலம் ஒரு இனம் மட்டுமே சார்ந்த அணுகுமுறையை மாற்றி தேவை அடிப்படையிலான அணுகுமுறையை செயல்படுத்தினார்.

அதன் மூலம் கருணைமிக்க ஒரு மலேசியாவை உருவாக்க அவர் அனைத்தையும் செய்தார் என்று தி நியூ ஸ்திரேட் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்க்காணலில்  நூருல் இஷா கூறினார்.

நடந்து முடிந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கைப்பிடித்ததைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் மாமன்னரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையானார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அன்வாரை பிரதமராக்கும் வகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பார் என  பக்காத்தான் ஹராப்பான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனது தந்தை பிரதமராகும் வகையில் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது பதவியை விட்டுக் கொடுப்பாரா என்ற விவகாரம் எழுந்தபோது தமக்கு வேதனை ஏற்பட்டாலும்  அதில் தாம் நம்பிக்கையுடன் இருக்கப் போவதாக முடிவெடுத்தார்.

“கடந்த 11 ஆண்டுகளாக என் தந்தை சிறையில்தான் இருந்தார். அவர் அண்மையில்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆகையால், புதிய சூழ்நிலையை வழக்கப்படுத்திக் கொள்ள கண்டிப்பாக அவருக்கு சிறிது அவகாசம் தேவை.

அதே வேளையில், அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் எனது தந்தை தனது வற்றாத ஆதரவை வழங்கி வந்துள்ளார்,” என நூருல் இஷா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *