எரித்துக் கொல்லப்பட்ட யுவதி: மகன் அளித்த வாக்குமூலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் பொலிஸ் அதிகாரியே பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

இவருக்கும் முக்கிய குற்றவாளி அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர்.

ஆனால் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி செளமியாவை அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.

தற்போது செளமியா கொல்லப்பட்ட நிலையில், சிறுவன் ரிஷிகேஷ் பொலிசாரிடம் தமது தாயார் தெரிவித்த அனைத்து சம்பவங்கலையும் விலாவாரியாக ஒப்புவித்துள்ளான்.

செளமியா காவல்துறையில் இணைந்த காலம் தொட்டே அஜாஸ் நோட்டமிட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இருவரும் சில காலம் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது அஜாஸிடம் இருந்து செளமியா வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தனது தாயாருடன் இணைந்து சென்று திருப்பி அளித்துள்ளார்.

ஆனால் அஜாஸ் அந்த பணத்தை கைப்பற்ற மறுத்துள்ளதுடன், அவர் குடியிருக்கும் கொச்சி நகரில் இருந்து செளமியாவை மாவேலிக்கரையில் கொண்டுசென்று விட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஜாஸ் சொந்த வேலை நிமித்தம் இரண்டு வாரங்கள் விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் செளமியாவை கொலை செய்யும் நோக்கிலே அவர் விடுமுறையில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி செளமியாவின் உடற்கூறு ஆய்வு இன்று மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அஜாஸ் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *