எழுக தமிழ் பரப்புரைகள்- நல்லூரில் ஆரம்பம்!!

எழுக தமிழ் நிகழ்வு அடுத்த மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான பரப்புரைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நல்லூர் கந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வீ.விக்கினேஸ்வரனால் பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *