ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: டோனி இல்லை

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டோனிக்குப் பதிலாக ரெய்னா கேப்டனாக உள்ளார். #IPL2019 #SRHvCSK

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் டோனி இல்லாததால் ரெய்னா கேப்டனாக செயல்படுகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

1. சாம் பில்லிங்ஸ், 2. அம்பதி ராயுடு, 3. ரெய்னா, 4. ஜடேஜா, 5. டு பிளிசிஸ், 6. இம்ரான் தாஹிர், 7. கரண் சர்மா, 8. தீபக் சாஹர், 9. சர்துல் தாகூர் 10. கேதர் ஜாதவ், 11. வாட்சன்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விஜய் சங்கர், 5. யூசுப் பதான், 6. தீபக் ஹூடா, 7. ரஷித் கான், 8. நதீம், 9. புவனேஸ்வர் குமார், 10. சந்தீப் சர்மா, 11. கலீல் அகமது.

Related Tags :

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *